புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் ஊக்கமருந்து உட் கொண்டது சோதனையில் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக உலக ஊக்கமருந்துத் தடுப்பு நிறுவனத் தின் அறிக்கை கூறுகிறது. அதே நேரத்தில் அவர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தில் பதிவு செய் துள்ள கிரிக்கெட் வீரர்களில் 138 பேரிடம் கடந்த ஆண்டு போட்டி களின்போது ஊக்கமருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், போட்டியில் விளையா டாத 15 பேரின் சிறுநீர், ரத்த மாதிரிகளும் சோதனைக்கு எடுத் துக்கொள்ளப்பட்டன. பத்தொன்பது வயதுக்குட்பட் டோருக்கான இந்திய அணியின் முன்னாள் வீரரும் டெல்லியைச் சேர்ந்தவருமான பிரதீப் சாங்வான், ஊக்கமருந்து உட்கொண்டதற் காகத் தடை செய்யப்பட்ட முதல் இந்திய கிரிக்கெட் வீரர். 2013 ஐபிஎல் தொடரில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடியபோது அவர் ஊக்கமருந்து எடுத்துக்கொண்டது உறுதி செய்யப்பட்டது.
ஊக்கமருந்து உட்கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்
1 mins read

