டென்னிஸிலிருந்து ஓய்வுபெறும் சுவிஸ் நட்சத்திரம் மார்டினா ஹிங்கிஸ்

டென்னிஸிலிருந்து ஓய்வுபெறும் சுவிஸ் நட்சத்திரம் மார்டினா ஹிங்கிஸ்

1 mins read

சிங்கப்பூர்: சுவிட்சர்லாந்து டென்னிஸ் நட்சத்திரம் மார்டினா ஹிங்கிஸ் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுகிறார். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் பெண்கள் வெற்றியாளர் கிண்ண டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் அவர் நேற்று தோல்வி அடைந்து டென்னிஸிலிருந்து விடை பெற்றார். இவர் தைவான் வீராங்கனை சான் யுங் ஜானுடன் சிங்கப்பூரில் நடைபெறும் பெண்கள் வெற்றியாளர் டென்னிஸ் போட்டியில் இணைந்து விளையாடினார். இந்த ஜோடி அரையிறுதியில் டிமியோ பாபோஸ் - ஆண்ட்ரியா ஹிலாக்கோவா ஜோடியிடம் நேற்று 6-4, 7-6 என்ற நேர் செட்களில் தோற்றது.