ககாமிகஹாரா: ஜப்பானில் நடைபெற்று வரும் மகளிருக்கான ஆசியக் கிண்ண ஹாக்கிப் போட்டியில் சிங்கப்பூரை 10=0 எனும் கோல் கணக்கில் இந்தியா பந்தாடியுள்ளது. கோல் மழை பொழிந்த இந்திய அணி போட்டியை அபார முறையில் தொடங்கியுள்ளது. இந்திய மகளிரின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிங்கப்பூர் அணி திக்குமுக்காடியது. ஆட்டத் தின் 3வது, 41வது நிமிடங்களில் நவ்நீத் கோரும் 15வது, 18வது நிமிடங்களில் ராணியும் 30வது, 50வது நிமிடங்களில் நவ்ஜோட் கோரும் 18வது நிமிடங்களில் லால்ரேம்சியாமியும் 25வது நிமிடத்தில் டீப் கிரேஸ் எக்காவும் 41வது நிமிடத்தில் குர்ஜீத் கோரும் 45 நிமிடத்தில் சோனிகாவும் இந்தியாவுக்காக கோல்களைப் போட்டனர். இந்தியா மேலும் பல கோல்களைப் போட்டிருக்கக்கூடும். ஆனால் சிங்கப்பூர் வீராங்கனைகள் அவற்றைப் போராடித் தடுத்தனர். மற்றோர் ஆட்டத்தில் சீனாவும் மலேசியாவும் மோதின. கடுமையான போட்டிக்குப் பிறகு சீனா 5-4 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
சிங்கப்பூரைப் பந்தாடிய இந்திய அணி
1 mins read

