காற்பந்துப் போட்டியின்போது சிறுநீர் கழித்த கோல்காப்பாளரை நடுவர் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றிய விநோத சம்பவம் இங்கிலாந்தில் நிகழ்ந்தது. தேசிய லீக் நார்த்தில் நேற்று முன்தினம் சால்ஃபர்ட் சிட்டி = பிராட்ஃபர்ட் பார்க் அவென்யூ குழுக்கள் மோதின. ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் சால்ஃபர்ட் கோல்காப்பாளர் மேக்ஸ் குரோகோம்ப் (வலது) கோல் கம்பத்திற்கு அருகே சிறுநீர் கழித்ததைக் கண்ட நடுவர், உடனடியாக சிவப்பு அட்டையை உயர்த்திக் காட்டி திடலைவிட்டே அவரை வெளியேற்றினார். தமது நடத்தைக்காக டுவிட்டர் மூலம் மன்னிப்புக் கோரிய குரோகோம்ப், அடக்கமுடியாமல் தவித்ததால் அப்படி நடந்து கொண்டதாகக் குறிப்பிட்டார். இப்படி நடப்பது இது முதல்முறை அல்ல. 2009ல் சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தின்போது அப்போதைய ஆர்சனல் கோல்காப்பாளர் யென்ஸ் லீமான் விளம்பரப் பலகைக்குப் பின்னால் சென்று சிறுநீர் கழித்து விட்டு வந்தார். படம்: டுவிட்டர்
சிறுநீர் கழித்ததால் சிவப்பு அட்டை
1 mins read
-

