எவர்ட்டனை வீழ்த்திய லெஸ்டர்

எவர்ட்டனை வீழ்த்திய லெஸ்டர்

1 mins read

லெஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் புதிய நிர்வாகியின்கீழ் களமிறங்கிய லெஸ்டர், எவர்ட்டன் குழுவை 2-0 என வெற்றி கொண்டது. புதிய நிர்வாகியான கிளாடி புவேல் தனது முதல் ஆட்டத்தி லேயே வெற்றியை ருசித்த நிலை யில், 'நிரந்தர நிர்வாகியாக வேண் டும்' என்ற எவர்ட்டன் குழுவின் தற்காலிக நிர்வாகியான டேவிட் அன்ஸ்வர்த்தின் கனவு நனவா வது கேள்விக் குறியாகியுள்ளது.

18வது நிமிடத்தில் ஜேமி வார்டியும் 29வது நிமிடத்தில் டெமராய் கரேவும் கோல்களைப் போட்டனர். பிற்பாதி ஆட்டத்தில் எவர்ட் டன் ஆதிக்கம் செலுத்தினாலும் அக்குழுவால் கோல் போட முடியவில்லை. இதனால், எவர்ட்டன் குழு தொடர்ந்து 'ரெலிகேஷன்' நிலை யில் உள்ளது. பிரைட்டன், சௌத்ஹேம்டன் குழுக்கள் மோதிய மற்றோர் ஆட்டம் 1-1 எனச் சமநிலையில் முடிந்தது.