மெக்சிகோ: மெக்சிகோ கார் பந்தயச் சுற்றையடுத்து நான்கா வது முறையாக வெற்றியாளர் பட்டம் வென்றார் மெர்சிடிஸ் வீரர் லூவிஸ் ஹேமில்டன். மெக்சிகோவில் நேற்று முன் தினம் நடந்த எஃப்1 கார் பந்தயத் தில் ரெட்புல் வீரர் மேக்ஸ் வெர் ஸ்டாப்பென் முதலிடத்தைப் பிடித்த நிலையில் போட்டாஸ் இரண்டாவது இடத்தையும் கிமி ரைக்கோனென் 3வது இடத்தையும் பிடித்தனர். பந்தயத்தின்போது பரம எதிரி களான ஹேமில்டன், வெட்டல் ஆகிய இருவரின் கார்களும் ஒன் றோடு ஒன்று மோதிக்கொண்ட தால் அவை பழுது அடைந்தன. பழுதடைந்த கார் சக்கரம் சரி செய்யப்பட்ட பின்னர் மீண்டும் பந்தயத்தைத் தொடங்கிய ஹேமில் டன், வெட்டலைவிட ஐந்து இடங் கள் பின்தங்கி ஒன்பதாவது இடத் தில் முடித்தார். ஆனாலும் ஃபெராரியின் வெட் டலால் 2வது இடத்தைப் பிடிக்க முடியாமல் போனதால், வெற்றி யாளர் பட்டம் ஹேமில்டன் வசமா னது. இதன்மூலம் தனது 32வது வயதில் நான்காவது முறையாக எஃப்1 வெற்றியாளர் பட்டம் வென்ற பிரிட்டனின் ஹேமில்டன் தன் சக நாட்டவரான ஜேகி ஸ்டீ வர்ட்டை முந்தியதோடு வெட்டலின் சாதனையையும் சமன் செய்தார். ஏழு முறை வெற்றியாளர் பட்டம் வென்ற மைக்கல் ஷுமாக்கரும் தனது 32வது வயதில் 4வது பட்டத்தை வென்று, அடுத்து வந்த மூன்று பருவங்களிலும் தொடர்ந்து வெற்றியாளர் பட்டம் வென்றார். எனவே ஹேமில்டனும் இனி வரும் மூன்று பருவங்களையும் வென்று, ஷுமாக்கரின் சாத னையை சமன் செய்ய வாய்ப்புள்ள தாக பிபிசி செய்தி தெரிவிக்கிறது.
நான்காவது முறையாக எஃப்1 வெற்றியாளர் பட்டம் வென்ற மெர்சிடிஸ் வீரர் லூவிஸ் ஹேமில்டன். படம்: ஏஎஃப்பி

