குத்துச்சண்டை: மனோஜ்குமாருக்குத் தங்கம்

குத்துச்சண்டை: மனோஜ்குமாருக்குத் தங்கம்

1 mins read

அமராவதி: தேசிய குத்துச்சண்டை வெற்றியாளர் கிண்ணப்போட்டி கள் ஆந்திர மாநிலத்தின் விசாகப் பட்டினத்தில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 69 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் கடந்த ஆண்டு வெற்றியாளரான மனோஜ்குமார் (ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம்), துரியோதன் சிங்கை (சர்வீசஸ் விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியம்) எதிர்கொண்டார். இப் போட்டியில் மனோஜ்குமார் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கப்பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.