நியூகாசலைப் பந்தாடியது பர்ன்லி

நியூகாசலைப் பந்தாடியது பர்ன்லி

1 mins read
3f52f593-ed00-4321-b9dc-aa9a9faf8fd1
-

பர்ன்லி (இங்கிலாந்து): டர்ஃப் மூர் மைதானத்தில் நேற்று முன் தினம் நடந்த பிரிமியர் லீக் காற் பந்தாட்டப் போட்டியில் நியூகாசல் யுனைடெட்டும் பர்ன்லியும் மோதின. ஆட்டத்தின் 74வது நிமிடத்தில் ஜெஃப் ஹென்ரிக் அடித்த கோலால் 1=0 என்ற கணக்கில் நியூகாசலை பர்ன்லி பந்தாடியது. இந்தப் பருவத்தில் அக்குழு பெற்ற 4வது வெற்றி இது. இதன்மூலம் 16 புள்ளிகள் உடன் அக்குழு 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே வேளை யில் நியூகாசல் (14 புள்ளிகள்) 9ஆம் இடத்திற்கு இறங்கியது. பர்ன்லி குழுவின் அதிரடி ஆட்டக்கார ரான கிறிஸ் உட் காயம் காரணமாக இந்த ஆட்டத் தில் விளையாடவில்லை. அவர் இல்லாமலேயே நியூ காசலைத் தோற்கடித்த பர்ன்லி குழுவை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.