ஹேரி கேன் குறித்த நம்பிக்கையில் ஸ்பர்ஸ்

ஹேரி கேன் குறித்த நம்பிக்கையில் ஸ்பர்ஸ்

1 mins read
72e67308-6d32-493a-bb77-a1cbf43318b1
-

லண்டன்: லண்டனின் வெம்பிளி அரங்கில் இன்று இரவு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் ரியால் மட்ரிட்டை எதிர்கொள்ளும் இங்கிலாந்தின் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் அணி காயம் காரணமாக கடந்த சில ஆட்டங்களில் விளையாட முடி யாமல் இருந்த ஹேரி கேன் மீண்டு வந்து தங்கள் அணிக்கு உயிரூட்டுவார் என்ற நம்பிக்கை யில் உள்ளது. முன்னணித் தாக்குதல் வீர- ரான ஹேரி கேன் இல்லாமல் ஸ்பர்ஸ் குழு வெஸ்ட் ஹேம், மான்- செஸ்டர் யுனைடெட் என இங்கி- லாந்து காற்பந்து லீக் ஆட்டங்கள் இரண்டில் தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில், சாம்பியன்ஸ் லீக் விருதைப் பலமுறை வென்று வரலாறு படைத்த ரியால் மட்ரிட் குழுவை எதிர்கொள்ள கேனின் வருகையை ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்திருக்கிறது. ஹேரி கேனின் வருகை சந் தேகமாகவே இருக்க போட்டிகளி லிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ள டெலி அலி ஸ்பர்ஸ் அணிக்கு மீண்டும் திரும்புவது அந்தக் குழுவின் நிர் வாகியான மொரிசியோ போக்கெட்டினோவுக்கு ஆறுதல் அளிக்கக்கூடியது. இன்றைய ஆட்டத்தில் ஸ்பர்ஸ், ரியால் மட்ரிட் என எந்தக் குழு வென்றாலும் அடுத்த தகுதிச் சுற்றுக்குச் செல்வது எளிதாகும்.

அக்டோபர் மாதம் 22ஆம் தேதி லண்டனின் வெம்பிளி அரங்கில் லிவர்பூல் அணியுடனான ஆட்டத்தில் ஹேரி கேன் காலில் காயம் ஏற்பட்டது. ஸ்பர்ஸ் அணியின் நட்சத்திர வீரரான இவருக்கு காயம் ஏற்பட்டதனால் அந்த அணிக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி