ஆசிய கிண்ண ஹாக்கி: அரையிறுதியில் இந்திய மகளிர்

ஆசிய கிண்ண ஹாக்கி: அரையிறுதியில் இந்திய மகளிர்

1 mins read

தோக்கியோ: ஆசிய கிண்ண ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியது. மொத்தம் எட்டு அணிகள் இரு பிரிவுகளாகக் களம் கண்டன. இந்திய அணி சிங்கப்பூரை 10=0, சீனாவை 4=1, மலேசியாவை 2=0 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கடித்து 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்தது. அதைத் தொடர்ந்து, நேற்று கால் இறுதி ஆட்டத்தில் கஸக்ஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி தொடக்கத்திலேயே பின்னடைவைச் சந்தித்தது. ஆட்டத்தின் இரண்டாம் நிமிடத் திலேயே கோலடித்தார் கஸக்ஸ்தான் வீராங்கனை வெரா டொமஷ்னேவா.

ஆயினும், அடுத்த இரு நிமிடங்களி லேயே பதிலடி தந்தார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை குர்ஜித் கவுர். அதன்பின் ஆட்டத்தில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியது. குர்ஜித் கவுர் மேலும் இரு கோல் களை அடித்து 'ஹாட்ரிக்' சாதனை படைக்க, தீப் கிரேஸ் ஏக்கா, நவ்நீத் கவுர் ஆகியோரும் ஆளுக்கு இரு கோல்களை அடித்தனர். இதுவரை ஆறு கோல்களை அடித் துள்ள குர்ஜித், நடப்பு ஆசிய கிண் ணத்தில் அதிக கோல்களை அடித்த வராகத் திகழ்கிறார். ஜப்பான்=மலேசியா இடையிலான காலிறுதி நேற்று நடக்கவிருந்தது. அப்போட்டியில் வென்ற அணியுடன் இந்தியா இன்று அரையிறுதியில் மோதும்.