ரியாலுக்கு அதிர்ச்சி தந்த ஸ்பர்ஸ்

ரியாலுக்கு அதிர்ச்சி தந்த ஸ்பர்ஸ்

1 mins read
f05cae91-a891-4956-ba41-b58c481e083b
-

லண்டன்: சாம்பியன்ஸ் லீக் காற் பந்தில் 2012ஆம் ஆண்டு முதல் பிரிவுச் சுற்று ஆட்டங்களில் தோல் வியே காணாத குழுவாகத் திகழ்ந்து வந்த ரியால் மட்ரிட்டின் வெற்றிப் பயணத்தை முடித்து வைத்தது டோட்டன்ஹம் ஹாட் ஸ்பர் குழு. டெலி அலி இரு கோல்களை யும் கிறிஸ்டியன் எரிக்சன் ஒரு கோலையும் அடிக்க, 3-1 என்ற கணக்கில் வென்ற ஸ்பர்ஸ் குழு காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கும் முன்னேறியது. 2008ல் யுவென்டஸ் குழுவிடம் 2-0 என்று தோற்ற பிறகு சாம்பியன்ஸ் லீக்கில் ரியால் குழு இப்படி இரண்டு கோல் வித்தியாசத் தில் தோற்றது இதுவே முதல் முறை. காயம் காரணமாக கேரத் பேலும் கோல்காப்பாளர் கெய்லர் நவாசும் களமிறங்க முடியாமல் போனது ரியால் குழுவிற்குப் பல வீனமாக அமைந்தது. இரு வாரங்களுக்கு ரியாலின் பெர்னபாவ் அரங்கில் நடந்த ஆட் டத்தில் 1-1 எனச் சமநிலை கண்ட ஸ்பர்ஸ் குழு, இம்முறை சொந்த ரசிகர்களின் முன்னிலையில் ஆடி யதால் தன்னம்பிக்கை மிகுந்து காணப்பட்டது. அதோடு, காயத் திலிருந்து மீண்டு ஹேரி கேன் திடலில் அடியெடுத்து வைத்ததும் அக்குழுவிற்குப் பெரும் பலமாக அமைந்தது. ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் ஸ்பர்சின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்த அலி, இடை வேளைக்குப் பின் தன் பங்கிற்கு மீண்டும் ஒரு கோலடித்து ரியால் வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். 65வது நிமிடத்தில் எரிக்சன் புகுத்திய கோலால் ரியாலின் தோல்வி உறுதியானது.