மேலேறத் துடிக்கும் செல்சி

மேலேறத் துடிக்கும் செல்சி

1 mins read

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துத் தொடரில் பட்டி யலில் முதல் ஐந்து இடங்களில் உள்ள குழுக்கள் நாளை மோது கின்றன. குறிப்பாக மான்செஸ்டர் யுனை டெட்=செல்சி, ஆர்சனல்=மான் செஸ்டர் சிட்டி குழுக்கள் மோதும் ஆட்டங்கள் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. கடந்த பருவ இபிஎல் வெற்றி யாளரான செல்சி குழு, இந்தப் பருவத்தில் இதுவரை பெரிய அளவில் சோபிக்கவில்லை. இந்த நிலையில் இரண்டாம் இடத்தில் உள்ள மேன்யூவுடனான புள்ளி இடைவெளியைக் குறைத்து பட்டி யலில் மேலேற வேண்டும் என்ற முனைப்போடு அக்குழு நாளைய ஆட்டத்தில் களமிறங்கும். சென்ற பருவத்தில் கடைசி ஐந்து ஆட்டங்களில் மட்டுமே தோற்ற செல்சி, இப்பருவத்தில் இப்போதே மூன்று ஆட்டங்களில் தோல்வியைச் சந்தித்துவிட்டது.

அது தவிர, இவ்வார மத்தியில் நடந்த சாம்பியன்ஸ் லீக் ஆட்டத் தில் ரோமா குழுவிடம் 3-0 எனத் தோற்றதால், வெற்றிபெற வேண் டும் எனும் வேட்கை செல்சி வீரர் களுக்கு வேண்டும் என்று அதன் நிர்வாகி கோன்டே வலியுறுத்தி இருக்கிறார். மேலும் மேன்யூவிடம் தோற்று விட்டால் முதலிடத்தைப் பிடிப்பது செல்சிக்கு இன்னும் சிரமமாகிப் போய்விடும். இந்நிலையில், மேன்யூ நிர்வாகி மொரின்யோ, செல்சிக்கு எதிராக தனது வியூகத்தை மாற்றுவது சந்தேகம்தான் எனக் கூறப்படு கிறது.