லண்டன்: யூரோப்பா லீக் காற் பந்துத் தொடரின் 'நாக் அவுட்' சுற்றுக்கு ஆர்சனல் முன்னேறியது. ரெட் ஸ்டார் பெல்கிரேட் குழு விற்கு எதிரான ஆட்டத்தை 0-=0 எனச் சமன் செய்தபோதும் அக்குழு அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. இரு அணிகளின் கோல் போடும் முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை. எதிரணி அரங்கில் நடந்த ஆட்டத்தில் கோல் புகுத்திய ஆர்சனல் வீரர் ஒலிவியர் ஜிரூட், நேற்று தனது சொந்த அரங்கில் நடந்த ஆட்டத்தில் பல கோல் வாய்ப்புகளைத் தவறவிட்டார். அவரது இரண்டு கோல் முயற் சிகளை ரெட் ஸ்டார் கோல் காப்பாளர் தடுத்துவிட்டார். ஆர்சனலின் கோல் எண்ணிக் கையைத் தொடங்கும் வாய்ப்பை ஜேக் வில்ஷியரும் தவறவிட்டார். ரெட் ஸ்டார் குழுவும் கோல் போட தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன் படுத்திக்கொள்ளவில்லை. எனவே கோல்கள் எதுவும் இல்லாமல் சமநிலையில் முடிந்தது ஆட்டம். மற்றோர் ஆட்டத்தில் லியோன் குழுவிடம் 3=0 என்ற கோல் கணக்கில் தோற்ற எவர்ட்டன் யூரோப்பா லீக்கில் இருந்து வெளி யேறியது. இதனால் எவர்ட்டன் குழுவின் நிரந்தர நிர்வாகியாக வேண்டும் என்ற டேவிட் அன்ஸ்வர்த்தின் ஆசை நிராசையாகிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமது குழுவின் ரசிகர் ஒருவரின் தலையில் காலால் எட்டி உதைத்த மார்சே குழு ஆட்டக்காரர் பேட்ரிஸ் எவ்ரா, போட்டி தொடங்கும் முன்னரே சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். போர்ச்சுகல் நாட்டின் விட்டோரியா கிய்மரேஸ் குழுவிற்கு எதிரான யூரோப்பா லீக் ஆட்டத்திற்கு முன் இப்படி தமது கோபத்தைக் காட்டினார் எவ்ரா. அந்த ஆட்டத்தில் மார்சே 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. வன்முறையில் இறங்கிய எவ்ராவிற்குப் பல ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ரசிகரை உதைக்கும் மார்சே வீரர் எவ்ரா. படம்: டுவிட்டர்

