காற்பந்து வீரருக்குத் தடை

காற்பந்து வீரருக்குத் தடை

1 mins read

லிமா: ஊக்கமருந்துச் சோதனையில் சிக்கியதால் பெரு நாட்டு காற்பந்து ஆட்டக்காரர் பாவ்லோ குரேரோவுக்கு 30 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் தகுதி பெறவேண்டும் என்ற பெரு அணியின் இலக்கு ஈடேறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இம்மாதம் 11, 15ஆம் தேதிகளில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 'பிளே ஆஃப்' போட்டிகளில் பெரு விளையாட இருக்கிறது. அதில் வெற்றிபெறும் அணி அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் தகுதிபெறும். தடை காரணமாக தாக்குதல் ஆட்டக்காரரான 33 வயது குரேரோ அப்போட்டிகளில் விளையாட முடியாது.