திடலுக்குள் கார் புகுந்ததால் அதிர்ச்சி

திடலுக்குள் கார் புகுந்ததால் அதிர்ச்சி

2 mins read
0a38c69b-0f5e-4dcc-8b42-8308e6ccb87d
-

புதுடெல்லி: கௌதம் காம்பீர், இஷாந்த் சர்மா, சுரேஷ் ரெய்னா போன்ற இந்திய கிரிக்கெட் விளையாட்டாளர்கள் பங்கேற்ற ரஞ்சி கிண்ணப் போட்டியின்போது பாதுகாப்பை மீறி கார் ஒன்று திடலுக்குள் புகுந்ததால் அதிர்ச்சி யும் பரபரப்பும் ஏற்பட்டது. டெல்லி பாலம் விமான நிலை யத் திடலில் உத்தரப் பிரதேசம் = டெல்லி அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது. இந்நிலையில், போட்டியின் மூன்றாம் நாளான நேற்று முன் தினம் கிரிஷ் சர்மா என்ற டெல்லி வாசி, விளையாட்டரங்க நுழை வாயிலில் பாதுகாவலர் யாரும் இல்லாததைக் கண்டதும் தமது காரை முழு வேகத்தில் திடலுக்குள் செலுத்தினார்.

இதைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த வீரர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அங்குமிங்கும் ஓடினர். ஆடுகளத்தின் குறுக்காக காரைச் செலுத்திய கிரிஷ், பின் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். ஆயினும், அனுபவ் குமார் என்ற விமான நிலையப் பாதுகாவலர், பார்வையாளர்களின் உதவியுடன் காரை நிறுத்தினார். வாயிலில் இருந்தபடி காவல் காக்கவேண்டிய அனுபவ், திடலுக் குள் வந்து ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. டெல்லி அணியின் பாதுகாப்பு ஊழியர்களும் விமானப் படையின ரும் இணைந்து மதுபோதையில் இருந்த கிரி‌ஷுக்கு தர்ம அடி கொடுத்து, போலிசிடம் ஒப்ப டைத்தனர். தான் கிரிக்கெட்டைத் தீவிர மாக நேசிப்பதாகவும் இரண்டு நிமிடப் புகழுக்காக அவ்வாறு செய்ததாகவும் போலிசிடம் கிரிஷ் தெரிவித்தார்.

திடலுக்குள் நுழைந்த கார் ஆடுகளத்தின் குறுக்கேயும் இயக்கப் பட்டதால் உத்தரப் பிரதேசம்- டெல்லி அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கிண்ண கிரிக்கெட் ஆட்டம் கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் தடைபட்டது. படம்: டுவிட்டர்