'ஆர்சனலுக்கு நல்ல வாய்ப்பு'

'ஆர்சனலுக்கு நல்ல வாய்ப்பு'

2 mins read
06d4c5bf-ef4c-4085-940e-b599a96f507a
-

மான்செஸ்டர்: நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் இதுவரை தோல்வியே காணாத மான்செஸ்டர் சிட்டி குழுவின் வெற்றிப் பயணத் தைத் தடுத்து நிறுத்த ஆர்சனல் குழு கங்கணம் கட்டியுள்ளது. இதுவரை ஆடிய பத்து ஆட்டங் களில் ஒன்பதில் வெற்றியும் ஓர் ஆட்டத்தில் சமநிலையும் கண்ட சிட்டி 28 புள்ளிகளுடன் பட்டி யலின் முதலிடத்தில் இருக்கிறது. மாறாக, மூன்று ஆட்டங்களில் தோல்வி கண்ட ஆர்சனல், சிட்டி யைவிட ஒன்பது புள்ளிகள் குறை வாகப் பெற்று ஐந்தாம் நிலையில் உள்ளது. இந்த நிலையில், இன்றிரவு சிட்டியை அதன் சொந்த எட்டிஹாட் அரங்கில் ஆர்சனல் எதிர்கொள்ள இருக்கிறது. இந்தப் பருவத்தில் பலமிக்க குழுவாக சிட்டி விளங்கினாலும் அதைத் தங்களால் வீழ்த்த முடியும் என்று ஆர்சனல் நிர்வாகி ஆர்சன் வெங்கர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

"இதுபோன்ற முக்கியமானஆட்டங்களைத் திறமையாக எதிர் கொள்ளும் குழு என்பதை வெளிக்காட்ட ஆர்சனலுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை நாங்கள் இன்று நன்கு பயன் படுத்திக்கொள்வோம் என்று உறுதியாகக் கூறுகிறேன்," என்று வெங்கர் கூறினார். "தற்காப்பு சிறப்பாக இருக்க வேண்டும். அதேநேரத்தில், தற் காப்பில் மட்டுமே கவனம் செலுத்தி விடக்கூடாது. பந்தைத் தக்க வைத்து, கோல் வாய்ப்புகளை உருவாக்கவேண்டும். சில நேரங் களில் தாக்குதலில் இறங்குவது தான் சிறந்த தற்காப்பாக இருக் கும்," என்றும் அவர் சொன்னார். வெங்கரின் நம்பிக்கைக்கு கடந்தகால வரலாறும் வலுசேர்க் கும் விதமாக இருக்கிறது. கடைசியாக சிட்டியுடன் மோதிய ஒன்பது ஆட்டங்களில் ஆர்சனல் நான்கு முறை வெற்றி பெற்றது; நான்கு ஆட்டங்கள் சமனில் முடிந்தன.