பாரிஸ்: யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டிக்கு முன் தன்னைக் கேலி செய்த ரசிகர் ஒருவரைக் காலால் எட்டி உதைத்ததற்காக பிரெஞ்சு காற்பந்து வீரர் பேட்ரிஸ் எவ்ராவை (படம்) அவர் பிரதி நிதிக்கும் மார்சே காற்பந்துக் குழு இடைநீக்கம் செய்துள்ளது. போர்ச்சுகலின் விட்டோரியா கிய்மரேசுக்கு எதிரான ஆட்டத் தில் 36 வயதான எவ்ரா மாற்று ஆட்டக்காரராகச் சேர்க்கப்பட்டு இருந்தார். அந்த ஆட்டத்தைக் காண்ப தற்காக அரங்கில் திரண்டிருந்த சுமார் 500 மார்சே ரசிகர்கள் எவ்ராவைச் சீண்டும் வகையில் கத்தியதாகக் கூறப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த எவ்ரா விளம்பரப் பலகையைத் தாண்டிக் குதித்து ரசிகர்களுடன் வாக்குவாதம் செய்தார். சக வீரர்கள் அவரைச் சாந்தப்படுத்தி அவ்விடத்திலிருந்து அழைத்துச் செல்ல முயன்றனர்.
ஆனால் திரும்பவும் ரசிகர் களை நோக்கிச் சென்ற எவ்ரா, அவர்களில் ஒருவரின் தலையில் காலால் உதைத்தார். இதையடுத்து, அவரை இடை நீக்கம் செய்த மார்சே குழு, அவர் மீது மேலும் ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது. அதேபோல, ரசிகர்கள் சிலர் நடந்துகொண்ட தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அக்குழு கூறியது. இதற்கிடையே, எவ்ரா சம்பவம் குறித்து விசாரித்து வரும் யூஃபா முதற்கட்டமாக அவருக்கு ஓர் ஆட்டம் தடை விதித்துள்ளது.

