இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து

இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து

2 mins read

ராஜ்கோட்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி யைத் தழுவியது. இந்தியா = நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் நடைபெற்றது. பூவா தலையாவில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்தடித்தது. இந்திய அணியில் முகம்மது சிராஜ் புதுமுகமாகக் களமிறங்கி னார். கப்தில் மற்றும் முன்ரோ தொடக்க ஆட்டக்காரர்களாகப் பந்தடித்தனர். இருவரது அபார ஆட்டத்தைச் சமாளிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். 11 ஓவர்களில் நியூசிலாந்து அணி 100 ஓட்டங்களைக் கடந்தது.

12வது ஓவரை வீசிய சாகல், கப்திலை வெளியேற்றினார். இதனையடுத்து, களமிறங்கிய வில்லியம்சன் 12 ஓட்டங்களில் புதுமுகப் பந்துவீச்சாளர் சிராஜ் பந்தில் ரோகித் வசம் கேட்ச் கொடுத்தார். ஆனாலும் முன்ரோ சிக்சர்கள், பவுண்டரிகளுடன் 54 பந்துகளில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 196 ஓட்டங்கள் குவித்தது. முன்ரோ 109 ஓட்டங் களுடனும் ப்ரூஸ் 18 ஓட்டங் களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் சாகல், சிராஜ் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த் தினர். இதனைத் தொடர்ந்து, 197 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பந்தடிக்கத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ‌ஷிகர் தவானும் இறங்கினர். ஆனால் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் இரண்டாவது ஓவரிலேயே இருவரையும் ஆட்டமிழக்கச் செய்து இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தனர்.