லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் ஏற்கெனவே சோதனைக்காலத்தை அனுபவித்து வரும் வெஸ்ட் ஹேம் அணிக்கு லிவர்பூல் மேலும் ஒரு படுதோல்வியைத் தந்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் 4=1 எனும் கோல் கணக்கில் வெஸ்ட் ஹேம்மைப் புரட்டி எடுத்தது. வெஸ்ட் ஹேம்மின் லண்டன் விளையாட்டரங்கத்தில் ஆட்டம் ஆரம்பித்து 21 நிமிடங்களில் லிவர்பூலின் கோல் மழை பெய்யத் தொடங்கியது. சக வீரர் சாடியோ மானே அனுப்பிய பந்து லிவர்பூல் குழுவின் எகிப்திய நட்சத்திர வீரர் முகம்மது சாலாவிடம் சென்றது. பந்தை அவரிடமிருந்து பறிக்க வெஸ்ட் ஹேம் கோல்காப்பாளர் விரைந்தார். ஆனால் பந்தை அவர் நெருங்குவதற்குள் அவரை முந்திக்கொண்ட சாலா கோல் போட்டார். மூன்று நிமிடங்கள் கழித்து, லிவர்பூலுக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. சாலா அனுப்பிய பந்து வெஸ்ட் ஹேம் வீரர் மீது பட்டு வலை நோக்கிச் சென்றது. அதைப் பாய்ந்து தடுத்தார் வெஸ்ட் ஹேம் கோல்காப்பாளர். ஆனால் அவர் தட்டிவிட்ட பந்தை வலைக்குள் சேர்த்தார் லிவர்பூலின் மட்டிப்.
லிவர்பூலின் முதல் கோலைப் போடும் முகம்மது சாலா (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

