காற்பந்து: ஸ்டோக் சிட்டியின் முன்னாள் தற்காப்பு ஆட்டக்காரர் மரணம்

காற்பந்து: ஸ்டோக் சிட்டியின் முன்னாள் தற்காப்பு ஆட்டக்காரர் மரணம்

1 mins read
Google News Preferred Icon

லண்டன்: ஸ்டோக் சிட்டி காற்பந்து அணியின் முன்னாள் தற்காப்பு ஆட்டக்காரரான டியோனட்டன் டெய்ஸீரா தனது 25 வயதில் காலமானார். இதனை பிரிமியர் லீக் கிளப் நேற்று அறிவித்தது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த டியோனட் டன், 2014ஆம் ஆண்டில் பிரிமியர் லீக் கிளப்பில் சேர்ந்தார். அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது. மிகவும் பிரபலமான ஆட்டக்காரரான டியோனட் டன் இந்த இளம் வயதில் மரணம் அடைந்தது ஏற்க முடியாத ஒன்று என ஸ்டோக் சிட்டியின் தலைமை நிர்வாகி டோனி ஸ்கோல்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.