வெஸ்ட் இண்டீஸ் அணியில் சுனில் அம்ப்ரிஸ் சேர்ப்பு; கைல் ஹோப் நீக்கம்

வெஸ்ட் இண்டீஸ் அணியில் சுனில் அம்ப்ரிஸ் சேர்ப்பு; கைல் ஹோப் நீக்கம்

1 mins read

லண்டன்: நியூசிலாந்துக்கு எதி ரான டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து கைல் ஹோப் நீக்கப் பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சுனில் அம்ப்ரிஸ் சேர்க்கப்பட்டுள் ளார். வெஸ்ட் இண்டீஸ் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதன்பின் ஸிம்பாப்வேக்கு எதிராக இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

இந்த இரண்டு தொடரிலும் கைல் ஹோப் இடம்பிடித்திருந்தார். கடந்த ஆட்டங்களில் கைல் ஹோப்பின் பந்தடிப்பு மோசமாக இருந்ததால் அவர் நீக்கப்பட்டுள் ளார். தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்: 1. ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), 2. கிரேக் பிராத்வைட், 3. சுனில் அம்ப்ரிஸ், 4. தேவேந்திர பி‌ஷூ, 5. ஜெர்மைன் பிளாக்வுட், 6. ரோஸ்டன் சேஸ், 7. கம்மினஸ், 8. ஷேன் டவ்ரிச், 9. ஷனோன் கேப்ரியல், 10. ‌ஷிம்ரோன் ஹெட் மேயர், 11. ஷாய் ஹோப், 12. அல் சாரி ஜோசப், 13. கிரன் பாவெல், 14. ரெய்மன் ரெய்ஃபெர், 15. கேமர் ரோச். டெஸ்ட் தொடர் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கு கிறது. 2வது டெஸ்ட் 9ஆம் தேதி நடக்கிறது. அதன்பின் மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள் ளது.