செல்சியிடம் வீழ்ந்தது யுனைடெட்

செல்சியிடம் வீழ்ந்தது யுனைடெட்

2 mins read

லண்டன்: செல்சி குழுவிடம் மான் செஸ்டர் யுனைடெட் பெற்ற தோல்வியால் இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் சிட்டி கட்டவிழ்த் துவிட்ட குதிரை போல முன்னேறிச் சென்றுவிட்டது. ஏற்கெனவே லீக் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சிட்டி ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டம் ஒன்றில் ஆர்சனல் குழுவை 3-=1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. அதனால் இரண்டாம் நிலையில் இருந்த யுனைடெட்டை விட 8 புள்ளிகள் முன்னேறிச் சென்றது. அந்த இடைவெளியைக் குறைக்கும் வாய்ப்பு மான்செஸ்டர் யுனைடெட்டிற்கு வந்தது. ஆனால் அதை யுனைடெட் தவறவிட்டது.

ஞாயிறு பின்னிரவு நடைபெற்ற ஆட்டத்தில் செல்சியும் யுனைடெட்- டும் பொருதின. யுனைடெட்டின் மத்தியத் திடல் நட்சத்திரம் பால் பொக்பா காயம் காரணமாக அணியில் இடம்பெறாதது அந்த ஆட்டத்தில் தெளிவாகத் தெரிந்- தது. மத்தியத்திடலில் செல்சியின் கைகள் ஓங்க யுனைடெட் கோல் வாய்ப்புகளுக்காகத் திணறியது. "மத்தியத்திடலில் செல்சி யுனைடெட் குழுவைக் 'கொன்று விட்டது'.

செல்சியின் செஸ்க் பெப்ரிகாஸ், எடன் ஹசார்ட், காண்டே ஆகியோர் சிறப்பாக விளை யாட யுனைடெட்டின் ஹெரேரா, மாட்டிச், மிக்கிட்டாரி- யான் ஆகியோரால் அவர்களைச் சமாளிக்க முடியவில்லை," என்றார் யுனைடெட்டின் முன்னாள் அணித் தலைவரும் தற்போதைய காற்பந்து வர்ணனையாளருமான கேரி நெவில். ஆட்டத்தின் ஒரே கோலைப் போட்டு அபார வெற்றி பெற்றது செல்சி. இந்த தோல்வியினால் சிட்டி எட்டு புள்ளி வித்தி யாசத்தில் பட்டியலில் முன்னணி வகிக்கிறது. வெறும் 11 ஆட்டங் களே முடிந்த நிலையில் இவ்வளவு பெரிய புள்ளிகள் வித்தியாசத்தில் ஒரு குழு முன்னணி வகிப்பது இதுவே முதல் முறை. மற்றொரு ஆட்டத்தில் 2-0 என்ற கோல் என்ணிக்கையில் பின் னணியில் இருந்த எவர்ட்டன் குழு, இறுதி 25 நிமிடங்களில் மூன்று கோல்கள் போட்டு வாட்ஃபர்ட் குழுவை வெற்றி கண்டது.