பியூனஸ் அயர்ஸ்: உலகின் சிறந்த காற்பந்து ஆட்டக் காரர்களில் ஒருவராகத் திகழும் அர்ஜெண்டினா அணித் தலைவர் லயனல் மெஸ்ஸி, அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடக்கவிருக்கும் உலகக் கிண்ணப் போட்டிகளில் ஸ்பெயினுடன் ஒரே பிரிவில் இடம்பெறுவதை விரும்பவில்லை. அவர் விளையாடிவரும் பார்சிலோனா குழு ஸ்பெயினைச் சேர்ந்ததாக இருப்பதும் அல்லது அக்குழுவைச் சேர்ந்த தமது நண்பர்களில் பலர் ஸ்பெயின் தேசிய அணியில் இடம்பெற்றிருப்பதும் அதற்குக் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல! "ஸ்பெயின் மிகக் கடினமான எதிராளி," என்கிறார் மெஸ்ஸி. அத்துடன், ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நான்கு அணிகளில் ஒன்றே உலகக் கிண்ணத்தை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாகவும் மெஸ்ஸி கருதுகிறார்.
ஸ்பெயினைக் கண்டு மிரளும் மெஸ்ஸி
1 mins read

