வாய்ப்பை தவறவிட்ட வடஅயர்லாந்து

வாய்ப்பை தவறவிட்ட வடஅயர்லாந்து

1 mins read

பெல்ஃவாஸ்ட்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பங்கேற் கும் பொன்னான வாய்ப்பை வட அயர்லாந்து தவறவிட்டுள்ளது. நேற்று அதிகாலை தலைநகர் பெல்ஃவாஸ்ட்டில் நடைபெற்ற 'பிளே ஆஃப்' சுற்றின் இரண்டாம் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து டனான போட்டியில் அது 0=0 என சமநிலை காண, முதல் சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து 1=0 என வென்றதால் இறுதியில் சுவிட்சர்லாந்து அணி தகுதி பெற்றுள்ளது. ஆட்டம் முடிய வினாடிகளே இருந்தபோது வடஅயர்லாந்தின் ஜானி எவன்ஸ் தலையால் முட்டி அனுப்பிய பந்து சுவிட்சர்லாந்தின் கோல்காப்பாளரைக் கடந்துச் சென்றது. பந்து கோல் வலையை நோக்கி செல்லும் நிலையில் சுவிட்சர் லாந்தின் தற்காப்பு வீரர் அதைத் தடுத்து தமது அணியைக் காப்பாற்றினார்.