அர்ஜெண்டினா தோல்வி

அர்ஜெண்டினா தோல்வி

1 mins read

மாஸ்கோ: நைஜீரியாவுக்கு எதிரான நட்புமுறை ஆட்டத் தில் அர்ஜெண்டினா 4-2 எனும் கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா குழுவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி களமிறங்கவில்லை. ஆட்டம் தொடங்கி அரை மணி நேரத்துக்குள் அர்ஜெண்டினா இரண்டு கோல்கள் போட்டு முன்னிலை வகித்தது. ஆனால் இடைவேளைக்கு முன்பு நைஜீரியா ஒரு கோல் போட்டது.

இடைவேளையின்போது ஆட்டக்காரர்களின் அறையில் அர்ஜெண்டினா குழுவின் செர்ஜியோ அகுவேரோ மயக்கம் போட்டு விழுந்ததால் அவர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவர் நலமாக இருப்பதாக அர்ஜெண்டினா காற்பந்துச் சங்கம் பிறகு அறிவித்தது. பிற்பாதி ஆட்டத்தில் நைஜீரியா மூன்று கோல்கள் போட்டு அர்ஜெண்டினாவை வீழ்த்தியது. மற்றொரு நட்புமுறை ஆட்டத் தில் பிரேசிலும் இங்கிலாந்தும் கோல் ஏதுமின்றி சமநிலை கண்டன. பல நட்சத்திரங்கள் களமிறங் காத நிலையில் இளம் வீரர்களைக் கொண்டு இங்கிலாந்து பிரேசிலை எதிர்கொண்டது. இருப்பினும், பிரேசிலை கோல் போட விடாமல் இங்கிலாந்து பார்த்துக்கொண்டது.