டப்ளின்: அடுத்த ஆண்டு ரஷ்யா வில் நடைபெறும் உலகக் கிண் ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற அயர்லாந்து கொண் டிருந்த கனவு கலைந்தது. டென்மார்க்குக்கு எதிராக நேற்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது 'பிளே ஆஃப்' ஆட்டத்தில் அயர்லாந்து 5=1 எனும் கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. டென்மார்க்கின் கிறிஸ்டியன் எரிக்சன் மூன்று கோல்கள் போட்டு தமது குழுவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற முதல் 'பிளே ஆஃப்' ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது. இந்நிலையில், அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நேற்று இரண்டாவது 'பிளே ஆஃப்' ஆட்டம் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கி ஆறு நிமிடங்களில் அயர்லாந்து கோல் போட்டு முன்னிலை வகித்தது. ஷேன் டஃப்பி தலையால் முட்டிய பந்து வலையைத் தொட்டது. இனி உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெறுவது உறுதி என்று கொண்டாட ஆரம்பித்த அயர் லாந்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
ஆட்டம் முடிந்ததும் சோகத்தில் வாடிய அயர்லாந்து ஆட்டக்காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

