ஜூரோங் எப்.சி. குழு சிங்கப்பூரில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. அதோடு இக்குழுவுக்காக விளையாடியுள்ள வீரர்களில் பலர் தேசிய குழுவுக்காகக் களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. நாளை மாலை ஜூரோங் எப்.சி.யின் முன்னாள் வீரர்கள், 1960களிலிருந்து தேசிய குழுவுக்கும் சிங்கப்பூர் காற்பந்து லீக்கின் வெவ்வேறு குழுக்களுக்கும் விளையாடிய இந்திய விளையாட்டாளர்கள் ஆகியோர் நாளை தீபாவளி கிண்ண ஆட்டத்தில் மோத இருக்கின்றனர். முன்னாள் தேசிய காற்பந்து வீரர்களான டெரி பத்மநாதன், எஸ்.சுப்ரமணி, வி.சுந்தரமூர்த்தி, தமிழ்மாறன் முதலியோர் இவ்வாட்டத்தில் விளையாடுகின்றனர். ஆட்டம் நாளை மாலை 5.30 மணிக்கு சிங்கப்பூர் இந்தியர் சங்கத் திடலில் நடைபெறுகிறது.
தீபாவளி கிண்ணத்தில் முன்னாள் நட்சத்திரங்கள்
1 mins read

