இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் ஆர்சனலும் ஸ்பர்சும் நாளை மோதுகின்றன. தற்போது 23 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஸ்பர்ஸ் உள்ளது. ஆர்சனல் 19 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில், அண்மையில் ஸ்பர்ஸ் குழுவில் இணைந்த ஐவரி கோஸ்ட் தற்காப்பு ஆட்டக் காரர் செர்கே ஓரியேவை உயர்தர ஆட்டக்காரர் என ஆர்சனல் நிர்வாகி ஆர்சன் வெங்கர் பாராட்டி உள்ளார். ஓரியேவை ஒப்பந்தம் செய்ய ஆர்சனல் நீண்டகாலமாகவே முயன்று வந்தது. ஆனால் அதன் முயற்சிகள் தோல்வியில் முடிய, 23 மில்லியன் பவுண்டுக்கு ஓரியேவை ஸ்பர்ஸ் ஒப்பந்தம் செய்தது.
"ஓரியே ஒரு சிறந்த ஆட்டக் காரர். தற்காப்பு ஆட்டக்காரராக இருந்தாலும் தாக்குதல் நடத்தும் திறனையும் கொண்டுள்ளார். எதிரணிக்கு ஆபத்து விளைவிக் கக்கூடிய வீரர். பாரிஸ் செயிண்ட் ஜெர்மேன் குழுவில் அவர் இருந்த போது எங்களுக்கு எதிராக அவர் விளையாடினார். ஒட்டுமொத் தத்தில் அவர் ஓர் உயர்தரத் தற்காப்பு ஆட்டக்காரர்," என்று வெங்கர் புகழாரம் சூட்டினார். 2010ஆம் ஆண்டிலிருந்து எமிரேட்ஸ் விளையாட்டரங்கத்தில் ஆர்சனலை ஸ்பர்ஸ் தோற்கடித்த தில்லை. ஆனால் ஸ்பர்ஸ் குழு வின் ஹேரி கேன் ஆர்சனலுக்கு எதிராக விளையாடிய 24 ஆட்டங்களில் 20 கோல்கள் போட்டுள்ளார்.

