கொச்சி: இந்திய சூப்பர் லீக் எனப்படும் ஐஎஸ்எல் காற்பந்து போட்டிகள் கொச்சியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் அட்லெட்டிகோ டி கோல்கத்தா, சென்னையின் எப்சி, டெல்லி டைனமோஸ், கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி எப்சி, புனே சிட்டி எப்சி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்சி, கோவா எப்சி, பெங்களூரு எப்சி, ஜாம்ஷெட்பூர் எப்சி ஆகிய 10 அணிகள் விளையாடுகின்றன. லீக் போட்டியின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
தொடக்க விழா கொச்சியில் உள்ள நேரு விளையாட்டரங்கில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலா கலமாக நடந்தது. அதைத் தொடர்ந்து நடந்த முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளர் அட்லெட்டிகோ டி கோல்கத்தா அணி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் மோதி யது. விறுவிறுப்பான இந்த மோத லில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முனைப்புக் காட்டினர். ஆனால் இரண்டு அணியிலும் கோல்காப்பாளர்கள் தடுத்து விளையாடியதால் அனைத்து முயற்சிகளும் வீணாயின. குறிப்பாக கோல்கத்தா வீரர் உதைத்த பந்தை கேரளா கோல் காப்பாளர் பால் ராசுப்கா தடுத்து விளையாடிய விதம் நன்றாக இருந்தது. எனவே ஆட்டம் கோலின்றி 0-0 எனச் சமநிலையில் முடிந் தது. ஐஎஸ்எல் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் எந்த அணிக்கும் வெற்றி கிடைக்கா தது இதுவே முதல் முறையாகும்.

