புதுடெல்லி: இந்திய தேசிய மல்யுத்த வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் ஆடவருக்கான 74 கிலோ எடை பிரிவில் ஒலிம்பிக் தொடரில் இரண்டு முறை பதக்கம் வென்ற சாதனை வீரர் சுஷில்குமார் தங்கம் வென்றுள்ளார். சுஷில் இறுதிச் சுற்றில் மிகவும் சிறப்பாக விளையாடினார். ரானாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பின் களமிறங்கிய சுஷில் குமாரின் விளையாட்டை அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் அபாரமாக இருந்தது. சுஷில்குமார் கடைசியாக 2014ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் தங்கப் பதக்கம் வென்றார். அதன்பின் தற்போதுதான் களம் இறங்கி உள்ளார். பெண்களுக்கான போட்டியில் சாக் ஷி மாலிக் மற்றும் கீதா போகத் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். 62 கிலோ பிரிவில் சாக் ஷி மாலிக் அரியானாவின் பூஜா டோமரை வீழ்த்தி தங்கம் வென்றார். கீதா 59 கிலோ பிரிவில் ரவிதாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

