புதுடெல்லி: இந்திய அணியின் விக்கெட்காப்பாளராகச் செயல்பட்டு வரும் மகேந்திர சிங் டோனியின் எதிர்காலத்தைத் தேர்வாளர்கள் மட்டுமே முடிவு செய்யவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் கபில் தேவ் கூறியுள்ளார். டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற டோனி இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒருநாள் மற்றும் டி20 அணித் தலைவர் பதவியிலிருந்து விலகி விக்கெட்காப்பாளர், பந்தடிப்பாளராக விளையாடி வருகிறார். அண்மைக் காலகமாக டோனி ஓய்வுபெற வேண்டும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. நியூசிலாந்து டி20 தொடரின்போது இரண்டாவது போட்டியில் அவர் மோசமாக விளையாடினார். இதனால் டோனி இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், டோனியின் ஓய்வு முடிவை தேர்வாளர்கள் மட்டுமே முடிவு செய்யவேண்டும் என கபில் தேவ் கூறியுள்ளார்.
'டோனியின் எதிர்காலத்தைத் தேர்வாளர்கள் முடிவு செய்யவேண்டும்'
1 mins read

