பாகாங் குழுவுடன் இணைந்த சிங்கப்பூர் காற்பந்து வீரர்

பாகாங் குழுவுடன் இணைந்த சிங்கப்பூர் காற்பந்து வீரர்

1 mins read

சிங்கப்பூர் தற்காப்பு ஆட்டக்கார ரான சஃபுவான் பஹருடின், 26, அடுத்த ஆண்டு மலேசிய சூப்பர் லீக் காற்பந்துக் குழுக்களில் ஒன்றான பாகாங் குழுவிற்காக விளையாட இருக்கிறார். இந்தத் தகவலை சஃபுவான் தனது இன்ஸ்டகிராம் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள் ளார். பாகாங் குழு அதிகாரி ஒருவரும் இதனை உறுதி செய் துள்ளதாக 'ஃபோர்ஃபோர்டூ' காற்பந்து இணையத்தள செய்தி கூறுகிறது. 2017 மலேசிய சூப்பர் லீக்கில் இரண்டாமிடம் பிடித்த பாஹாங் குழு, அடுத்த ஆண்டு 'ஏஎஃப்சி' கிண்ணத்திலும் பங்கேற்கிறது. கடந்த இரு பருவங்களாக மலேசிய பிரிமியர் லீக் குழுவான 'பிடிஆர்எம்' குழு சார்பாக சஃபுவான் விளையாடினார். அனைத்துலக ஆட்டங்களில் 76 முறை சிங்கப்பூரைப் பிரதி நிதித்துள்ள சஃபுவான், தற்காப்பு, மத்தியத் திடல், தாக்குதல் என மூன்று நிலைகளிலும் விளையாடி இருக்கிறார்.

இப்போதைக்கு மலேசிய சூப்பர் லீக்கில் இடம்பெற்றுள்ள ஒரே சிங்கப்பூரர் சஃபுவான்தான் என்பது குறிப்பிடத்தக்கது.