இரண்டு பட்டங்களுக்கு இலக்கு வைத்துள்ள இப்ராகிமோவிச்

இரண்டு பட்டங்களுக்கு இலக்கு வைத்துள்ள இப்ராகிமோவிச்

1 mins read

மான்செஸ்டர்: இந்தப் பருவத்தில் வலுவான குழுவாகத் திகழ் வதால் இங்கிலிஷ் பிரிமியர் லீக், சாம்பியன்ஸ் லீக் என இரு முக் கிய பட்டங்களுக்குத் தாங்கள் குறிவைத்துள்ளதாக மான்செஸ் டர் யுனைடெட் காற்பந்துக் குழு வீரரான ஸ்லாட்டன் இப்ராகி மோவிச் தெரிவித்துள்ளார். காயம் காரணமாக பல மாதங் களாக வெளியிலிருந்த இப்ராகி மோவிச், போக்பா, ரோஹோ ஆகியோர் பூரண குணமடைந்து, கடந்த வார இறுதியில் நடந்த நியூகாசலுக்கு எதிரான ஆட்டத் தில் விளையாடினர். அதில் யுனைடெட் 4=1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. "எதற்கும் சாத்தியமுள்ளது. இப்பருவத்தில் நாங்கள் வலுவான வர்களாக விளங்குவதால் கிண் ணங்களை வெல்ல முடியும் என நாங்கள் திடமாக நம்புகிறோம்," என்ற இப்ராகிமோவிச், எல்லாரும் அணிக்குத் திரும்பியிருப்பதால் நிர்வாகி மொரின்யோவும் மகிழ்ச் சியாக இருப்பதாகக் குறிப்பிட் டார். சாம்பியன்ஸ் லீக்கில் 'ஏ' பிரி வில் இடம்பெற்றுள்ள யுனைடெட் குழு, இன்றிரவு சுவிட்சர்லாந்தின் பெசல் குழுவுடன் மோதவுள்ளது.