மாற்று வீரர்: சாதனையை முறியடித்த பீட்டர் கிரௌச்

மாற்று வீரர்: சாதனையை முறியடித்த பீட்டர் கிரௌச்

1 mins read

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் மாற்று வீரராக அதிக ஆட்டங்களில் களமிறங்கி யவர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார் ஸ்டோக் சிட்டி குழுவிற்காக விளையாடி வரும் பிரிட்டனின் பீட்டர் கிரௌச். லிவர்பூல், ஸ்பர்ஸ் போன்ற குழுக்களின் முன்னாள் ஆட்டக் காரரான 36 வயது கிரௌச், பிரைட்டன் குழுவிற்கு எதிராக நேற்று அதிகாலை நடந்த ஆட் டத்தில் மாற்று வீரராகக் களம் இறக்கப்பட்டார். இப்படி அவர் திடலில் புகுந்தது இது 143வது முறை. இதன்மூலம் முன்னாள் நியூகாசல் யுனைடெட் வீரரான ஷோலா அமியோபியின் 'மாற்று ஆட்டக்காரர்' சாதனையை கிரௌச் முறியடித்தார். இவர் இங்கிலாந்து தேசிய அணிக்கா கவும் 42 போட்டிகளில் விளை யாடியுள்ளார். ஸ்டோக் சிட்டி=பிரைட்டன் குழுக்களுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.