சாம்பியன்ஸ் லீக் காற்பந்து: தற்காப்பைத் தகர்க்க முனைப்பு

சாம்பியன்ஸ் லீக் காற்பந்து: தற்காப்பைத் தகர்க்க முனைப்பு

1 mins read
e5694030-264a-4a54-bd03-21c7f6492fac
-

டூரின்: எதிரணியின் அரங்கில் இன்று நடக்கவிருக்கும் ஆட்டத் தில் சமநிலை கண்டாலே பார்சி லோனா காற்பந்துக் குழு சாம்பி யன்ஸ் லீக்கின் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்குத் தகுதிபெற்று விடலாம். மாறாக, யுவென்டசிடம் அந்தக் குழு தோல்வி கண்டு, 'டி' பிரிவில் நடக்கும் மற்றோர் ஆட்டத்தில் ஸ்போர்ட்டிங் குழு, ஒலிம்பியாக் கோஸ் குழுவை வீழ்த்திவிட்டால் பார்சிலோனாவின் நிலை சிக்க லாகிவிடும். கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது நூ காம்ப் அரங்கில் நடந்த சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் பார்சி லோனா, யுவென்டசை துவைத்து எடுத்தது. அப்படியொரு நிலை மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் யுவென்டஸ் கவனமாக உள்ளது.

போதாதற்கு, சென்ற வார இறுதி யில் நடந்த இத்தாலிய லீக்கில் 3-2 என்ற கோல் கணக்கில் சாம்ப்டோரியாவிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்ததால் அதிலிருந்து மீண்டெழ வேண்டிய கட்டாயமும் யுவென்டசுக்கு இருக்கிறது. இருந்தபோதும், பார்சிலோனா வின் வலுவான தற்காப்பை மீறி அக்குழு கோலடிப்பது மிகவும் சவாலான செயலே! ஏனெனில், இந்தப் பருவத்தில் இதற்குமுன் தான் ஆடிய நான்கு ஆட்டங்களி லும் சேர்த்து ஒரு கோலை மட்டுமே பார்சிலோனா விட்டுக்கொடுத்து உள்ளது. அதுவும் அவர்களே போட்டுக்கொண்ட சொந்த கோல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓங்கப்போவது யாருடைய கை?... தான் ஆடிய கடைசி ஐந்து ஆட்டங்களில் ஆறு கோல்களை அடித்திருக்கும் யுவென்டஸ் தாக்குதல் ஆட்டக்காரர் கோன்சாலா ஹிகுவைன் (இடது). படம்: ஏஎஃப்பி