மெல்பர்ன்: ஆஸ்திரேலியக் காற் பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளர் ஏஞ் போஸ்திகோக்லு பதவி விலகி உள்ளார். அண்மையில் ஹோண்டு ராசுக்கு எதிரான 'பிளே ஆஃப்' சுற்றில் வெற்றி பெற்ற ஆஸ்தி ரேலியா, அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இதற்கு போஸ்திகோக்லு வகுத்த வியூகம் முக்கிய காரணம் என்று புகழாரம் சூட்டப்பட்டது. இந்நிலையில், அவரது பதவி விலகல் செய்தியைக் கேட்டு பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
"ஆஸ்திரேலியக் காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளராக நான் பொறுப்பேற்றதை அடுத்து அதிக மனவுளைச்சலுக்கு ஆளா னேன். மிகவும் சோர்வடைந் துள்ளேன். ஆஸ்திரேலியக் காற்பந்துக்கு மிகவும் முக்கியமான காலகட்டம் என்று தெரிந்து கடுமையாக உழைத்தேன். "மிகுந்த வருத்தத்துடன் எனது பயிற்றுவிப்பார் பயணத்தை முடித்துக்கொள்கிறேன். சொந்த நாட்டின் குழுவுக்குப் பயிற்று விப்பாளராகப் பணிபுரிவது எனக்குக் கிடைத்த மாபெரும் கௌரவம். ஆனால் அந்தக் கௌரவத்துடன் பெரிய பொறுப்பும் உள்ளது. உலகக் கிண்ணப் போட்டியில் குழுவை வழிநடத்த போதுமான சக்தி கொண்ட ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைக்க நேரம் வந்துவிட்டது," என்றார் போஸ்திகோக்லு.

