ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள ராணுவப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நேற்று முன்தினம் தங்கள் பள்ளிக்கு திடீர் வருகைபுரிந்த சிறப்பு விருந்தினரைக் கண்டு மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயினர். இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினண்ட் ஜெனரலாக நியமிக்கப்பட்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனியே அந்தப் பிரபலம். அப்பள்ளி மாணவர்களுடன் ஆர்வத்துடன் கலந்துரையாடிய டோனி, கல்விக்கும் விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அவர்களிடம் வலியுறுத்தினார்.
காஷ்மீர் மாணவர்களுடன் டோனி
1 mins read

