வாய்ப்பை நழுவவிட்ட யுனைடெட்

வாய்ப்பை நழுவவிட்ட யுனைடெட்

1 mins read
44e3633b-9ffe-4467-8f12-e2dbb749a8b8
-

பெசல் (சுவிட்சர்லாந்து): ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்களே இருந்தபோது பெசல் காற்பந்துக் குழுவின் மைக்கல் லாங் அடித்த கோல் அடுத்த சுற்றுக்கு முன் னேறிவிடலாம் என்று நினைத்து இருந்த மான்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர்களின் நம்பிக்கையைச் சிதறடித்தது. செயின்ட் ஜேக்கப் பார்க் விளையாட்டரங்கில் நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள யுனைடெட்டும் பெசலும் மோதின. ஏற்கெனவே விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் வென்று இருந்ததால் இந்த ஆட்டத்தில் சமன் கண்டாலே போதும், 'நாக் அவுட்' சுற்றில் நுழைந்துவிடலாம் என்ற நிலையில் யுனைடெட் குழு இருந்தது. முற்பாதியில் அக்குழுவினர் ஆடிய விதத்தைக் கண்டபோது அந்த எண்ணாம் ஈடேறுவதுபோல் தான் இருந்தது. இரு குழுவினரும் சளைக்காமல் விளையாடியதால் யாருடைய கோல் முயற்சியும் பலிக்கவில்லை.

பெசல் குழுவிற்கெதிரான ஆட்டத்தில் 'ஃபிரீ கிக்' மூலம் பந்தை வலைக்குள் முயன்ற மான்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர் பால் போக்பாவின் எண்ணம் ஈடேறவில்லை (இடது). படம்: ஏஎஃப்பி