இரண்டு ஓட்டங்களுடன் சுருண்ட நாகலாந்து மகளிர்

இரண்டு ஓட்டங்களுடன் சுருண்ட நாகலாந்து மகளிர்

1 mins read

குண்டூர்: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நடத்தும் 19 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான ஒருநாள் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற போட்டியில் 'பி' பிரிவில் இருக்கும் கேரளா = நாகலாந்து அணிகள் மோதின. முதலில் பந்தடித்த நாகாலாந்து அணி 17 ஓவர்களில் 2 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து ஓட்டங்களையும் இழந்தது. இரண்டு ஓட்டங்களில் ஓர் ஓட்டம் மட்டுமே நாகலாந்து வீராங் கனையால் அடிக்கப்பட்டது. ஓர் ஓட்டம் வைடு மூலம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, 299 பந்துகள் மீதமிருந்த நிலையில் கேரள அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.