பிரிஸ்பன்: ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி பிரிஸ்பனில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 80.3 ஓவர்கள் முடிவில் இங்கி லாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ஓட்டங்கள் எடுத் திருந்தது. மலான் 28 ஓட்டங் களுடனும் மொயீன் அலி 13 ஓட்டங்களுடனும் களத்தில் இருந் தனர். இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று தொடங் கியது. மலானும் மொயீன் அலியும் 83 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் மலான் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, மொயீன் அலியும் நடையைக் கட்டினார். அதன்பின் யாரும் அதிக நேரம் நீடிக்காததால் இங்கிலாந்து அணி 302 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
கிரிக்கெட்: விட்டுக்கொடுக்காமல் போராடும் ஸ்மித்
1 mins read

