நாக்பூர்: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் இரண் டாவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. இதற்கு முரளி விஜய், புஜாரா ஆகியோர் அடித்த சதங்கள் முக்கிய காரணம். இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கைக் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கோல்கத்தாவில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் சமநிலையில் முடிந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப் பட்டிருந்தன. ஷிகர் தவான், புவனேஷ்வர்குமார், முகம்மது ஷமி ஆகியோருக்குப் பதிலாக முரளி விஜய், ரோகித் சர்மா, இஷாந்த் ஷர்மா சேர்க்கப்பட்டனர். எதிர்பார்க்கப்பட்ட தமிழக ஆல்- ரவுண்டர் விஜய் சங்கருக்குக் களமிறங்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப் படவில்லை.
இலங்கைப் பந்துவீச்சாளர்கள் வீசிய பந்தை அனைத்து திசைகளிலும் பறக்க விட்டு ஓட்டங்கள் சேர்த்த முரளி விஜய் (இடது), புஜாரா. படம்: ஏஎஃப்பி

