சாதனைகளை விரட்டிப் பிடிக்கும் விராத்

சாதனைகளை விரட்டிப் பிடிக்கும் விராத்

1 mins read

நாக்பூர்: இலங்கை அணிக்கெதி ரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற இன்னும் ஒன்பது விக்கெட்டுகளே தேவைப் படுகின்றன. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதமிருப்பதால் இந்திய அணி வெல்வது பெரும் பாலும் உறுதியாகிவிட்டது. போட்டியின் மூன்றாம் நாளான நேற்று இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி இரட்டை சதமடித்தார். இதன்மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் சகாப்தம் பிரையன் லாராவுடன் ஒரு சாதனையை கோஹ்லி பகிர்ந்துகொண்டார். அணித் தலைவராக அதிக முறை இரட்டை சதம் (5) அடித்தவர்கள் என்ற சாதனைக்கு அவ்விருவருமே இனி சொந்தம் கொண்டாடலாம். அத்துடன், இந்திய அணித் தலைவராக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதமடித்தவர் என்ற சாத னையை சுனில் கவாஸ்கரிடம் இருந்து தட்டிப் பறித்தார் கோஹ்லி. அணித் தலைவராக கவாஸ்கர் 12 சதங்களையும் கோஹ்லி 13 சதங்களையும் அடித்துள்ளனர்.

முதல் டெஸ்ட்டில் அணி அபாய கட்டத்தில் இருந்தபோது பொறுப்புடன் ஆடி சதமடித்து அணியை மீட்ட இந்திய அணித் தலைவர் கோஹ்லி, 2வது ஆட்டத்தில் மிக எளிதாக இரட்டை சதமடித்தார். படம்: ஏஎஃப்பி