லிவர்பூல்: மாற்று ஆட்டக்காரராகத் திடலில் இறங்கி ஆட்டத்தின் முடிவையே மாற்றியமைத்தார் செல்சி காற்பந்துக் குழுவிற்காக விளையாடி வரும் பிரேசில் வீரர் வில்லியன். இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் நேற்று அதிகாலை நடந்த முக்கிய மான ஆட்டத்தில் செல்சி குழுவை தனது சொந்த ஆன்ஃபீல்ட் அரங் கில் எதிர்கொண்டது லிவர்பூல். முற்பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தபோதும் இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கி 20 நிமிடங் களில் கோலடித்து லிவர்பூலை முன்னிலை பெறச் செய்தார் முகம்மது சாலா. இதன்மூலம் நடப்பு இபிஎல்லில் அதிக கோல் அடித்தோர் பட்டியலில் பத்து கோல்களுடன் அவர் முதலிடத் திற்கு முன்னேறினார். சென்ற வார மத்தியில் நடந்த சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் 3=0 என முன்னி லையில் இருந்த லிவர்பூல், பிற் பாதியில் தற்காப்பில் சோடைபோக மூன்று கோல்கள் அடித்து ஆட்டத்தைச் சமன்படுத்தியது ஸ்பெயினின் செவிய்யா குழு.
ஆட்டம் முடிய ஐந்து நிமிடங்களே இருந்தபோது பதில் கோலடித்து, தோல்வியின் பிடியிலிருந்து குழுவை மீட்ட வில்லியனை (இடது) பாராட்டும் சக செல்சி ஆட்டக்காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

