"சுழற்பந்து வீச்சு எளிதானது அல்ல. தற்போது வீரநடைபோல் எழுந்து இருப்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அதற்கு பின்னால் நிறைய இருக்கிறது. நானும் ஜடேஜாவும் அதிகமான ஓவர்கள் வீசினோம். இதனால் விக்கெட்டுக்களை எடுப்பதற்கு உதவியாக இருந்தது," என்ற அஷ்வின் கூறியுள்ளார். டெஸ்டில் சாதனை படைத்து வரும் அஷ்வின் ஒரு நாள் போட்டியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இதற்கிடையே அஷ்வினின் சாதனையை இலங்கையின் முன் னாள் சுழற்பந்து நட்சத்திரம் முத்தையா முரளிதரன் பாராட்டியுள்ளார்.
"தற்போது அஷ்விந்தான் உலகின் ஆகச் சிறந்த சுழல் பந்துவீச்சாளார். அவரால் இன்னும் சாதிக்க முடியும். தற்போது ஒரு நாள் போட்டிகளில் அவர் இல்லை. ஒரு நாள் போட்டிகளிலும் பங்கேற்று அதிலும் சா தி க் க வே ண் டு ம் . தற்போது அவருக்கு 31 வயதுதான் ஆகிறது. 35 வயதை எட்டும்போது சிரமங்களை எதிர்பார்க் கக்கூடும்," என்று அவர் கூறினார். முரளிதரன் 133 டெஸ்ட் ஆட்டங்களில் 800 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார்.

