நாக்பூர்: இலங்கையுடனான டெஸ்ட் ஆட்டத்தைப் போன்றே பந்தடிப்பில் வேகத்தைக் காட்டவுள் ளதாக இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார். இலங்கைத் தொடரை அடுத்து இந்தியா தென்னாப்பிரிக்க தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதிலும் தாம் இதே வலுவான ஆட்டத்தையும் அணுகு முறையையும் கடைப்பிடிக்கவுள் ளதாக அவர் கூறினார். "நான் தற்போது பந்தடிக்கும் பாணியிலேயே ஜனவரி மாதத்தில் தொடங்கும் தென்னாப்பிரிக்க தொடரிலும் விளையாட விரும்புகிறேன்.
நல்ல நிலைக்கு வந்து விட்டு வேகமாக அடித்து ஓட்டங்களைச் சேர்ப்பதுதான் எனது நோக்கமாகும். "வேகமாக அதிக ஓட்டங்கள் சேர்க்கும் பட்சத்தில் நமது பந்து வீச்சாளர்கள் எதிரணியை மடக்குவதற்கு போதிய கால அவகாசம் கிடைக்கும். தென்னாப் பிரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுப் பயணங்களிலும் இதுபோன்ற ஆக்ரோஷமான அணுகுமுறை யைத்தான் நாங்கள் பின்பற்றப் போகிறோம். பெரிய சதத்தை அடிக்கவே நான் விரும்புகிறேன்," என்றார் கோஹ்லி.

