வாய்ப்புகளை வீணாக்கி தோல்வி அடைந்த ஸ்பர்ஸ்

வாய்ப்புகளை வீணாக்கி தோல்வி அடைந்த ஸ்பர்ஸ்

1 mins read
fc50c4d8-f3b5-4ca4-bf52-4708b0a2950f
-

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் லெஸ்டர் சிட்டியிடம் 2=1 எனும் கோல் கணக்கில் ஸ்பர்ஸ் குழு அதிர்ச்சித் தோல்வி அடைந் துள்ளது. இந்த ஆட்டம் நேற்று முன்தினம் லெஸ்டரின் கிங் பவர் விளையாட்டரங்கத்தில் நடை பெற்றது. கடந்த மே மாதத்தில் ஸ்பர்ஸ் குழுவிடம் 6=1 எனும் கோல் கணக்கில் லெஸ்டர் படுதோல்வி அடைந்திருந்தது. ஆனால் 2015=2016 பருவத் தில் லீக் பட்டம் வென்றபோது இருந்த வேகம் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் லெஸ் டரிடம் காணப்பட்டது. கடந்த ஐந்து ஆட்டங்களில் ஸ்பர்ஸ் மூன்று ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியுள்ளது. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் வார்டி போட்ட கோல் மூலம் லெஸ்டர் முன்னிலை வகித்தது. அதனைத் தொடர்ந்து, ஆட்டத்தைச் சமன் செய்ய ஸ்பர்ஸ் அரும்பாடுபட்டது. ஆனால் மூசா சிசோக்கோவும் டெலி அலியும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை நழுவ விட்டனர். வாய்ப்புகளைப் பயன்படுத்த தவறிய ஸ்பர்சுக்குத் தண்டனை அளிக்கும் வகையில் லெஸ்டர் அதன் இரண்டாவது கோலை இடைவேளைக்குச் சில வினாடிகள் மட்டுமே எஞ்சியிருந்தபோது போட்டது.

ஸ்பர்ஸின் டெலி அலியின் (நடுவில்) கோல் முயற்சியைத் தடுத்து நிறுத்தும் லெஸ்டரின் தற்காப்பு ஆட்டக்காரர் டெமராய் கிரே (இடது). பந்தைத் தடுத்து நிறுத்தும் முனைப்புடன் காத்திருக்கும் லெஸ்டர் சிட்டியின் கோல்காப்பாளர் கேஸ்பர் ஷெமைக்கல். படம்: ஏஎஃப்பி