இரண்டு ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற முடியாது திக்கித் திணறும் குழு என இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான ஆர்சனலுக்கு ஒரு பெயர் உண்டு. ஆனால், நேற்று அதிகாலை தனது சொந்த மைதானமான எமிரேட்சில் ஹடர்ஸ்ஃபீல்டை எதிர்கொண்ட ஆர்சனல் குழு இதுவரை காணாத விறு விறுப்பான ஆட்டத்தையும் போராடும் குணத்தையும் வெளிப் படுத்தியது. ஒலிவியே ஜிரூ இரண்டு கோல்கள், லக்காசெட், சாஞ்செஸ், ஒசில் என மற்ற மூவர் தலா ஒரு கோல் என ஐந்து கோல்களைப் போட்டு ஹடர்ஸ்ஃபீல்டை உண்டு இல்லை என்று ஆக்கியது.
அதிலும், ஆட்டநாயகனும் ஜெர்மனிய வீரருமான மெசுட் ஒசில், தான் ஒரு கோல் போட்டதோடு அன்றி மேலும் இரண்டு கோல்களுக்கு காரண மாக விளங்கியது ஆர்சனல் ரசிகர்களைக் குதூகலத் தில் ஆழ்த்தியது. அதுவும் தனது குழு வினரை அதிகம் பாராட்ட முடியாமல் இருந்த ஆர்சனல் நிர்வாகியான ஆசின் வெங்கர், நேற்றைய ஆட்டத்திற்குப் பின் குழு வினரை வாயாரப் புகழ்ந் தார். மெசுட் ஒசில் குறித்து பேசிய வெங்கர், "அவர் ஒரு சிறந்த காற்பந்தாட்டக்காரர் என்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. ஆனால், அவர் தற்பொழுது எதிரணியினருடன் போராடி தன்னால் பந்தை வெல்லவும் முடியும் என்பதை நிரூபித் துள்ளார்," என உச்சி குளிரப் புகழ்ந்தார்.
நேற்று ஹடர்ஸ்ஃபீல்டுக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சனலின் ஐந்தாவது கோலைப் போடுகிறார் ஒலிவியே ஜிரூ (வலமிருந்து இரண்டாவதாக சிவப்பு சீருடையில்). படம்: ராய்ட்டர்ஸ்

