யுனைடெட்-ஆர்சனல் இன்று பலப்பரிட்சை

யுனைடெட்-ஆர்சனல் இன்று பலப்பரிட்சை

1 mins read
01352580-3ce3-43b2-a9ca-944dc0c26810
-

லண்டன்: ஒரு காலகட்டத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டி யில் மான்செஸ்டர் யுனைடெட்டும் ஆர்சனலும் பொருதும் ஆட்டங்கள் காற்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒன்றாகத் திகழ்ந்தன. கடந்த 1997ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை இவ்விரு குழுக்களுக்கிடையே லீக் பட்டத்துக்காக கடினமான போட்டி நிலவியது. இரு குழுக்களும் மோதும் ஆட்டங்களில் தீப்பொறி பறக்கும். குறிப்பாக மத்திய திடல் வீரர் களான யுனைடெட்டின் ராய் கீன், ஆர்சனலின் பேட்ரிக் வியேரா ஆகியோரிடையே நிகழும் போராட் டத்தில் அனல் பறக்கும். அவ்விருவருமே திறமையான மத்திய திடல் ஆட்டக்காரர்கள், போட்டியில் சிறிதும் விட்டுக் கொடுக்காதவர்கள், அதேநேரத் தில் ஒருவருக்கு ஒருவர் மரியாதை கொடுத்து விளையாடும் தன்மை யுடையவர்கள். இவ்விருவரே யுனைடெட், ஆர்சனல் ஆட்டங் களை சுவாரசியமாக்கினர்.