5,000 டெஸ்ட் ஓட்டங்களை எட்டி கோஹ்லி சாதனை; ஆஸி. திணறல்

5,000 டெஸ்ட் ஓட்டங்களை எட்டி கோஹ்லி சாதனை; ஆஸி. திணறல்

1 mins read
628e29ac-bda1-481a-8a19-0aa7eea770f0
-

புதுடெல்லி: இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி நேற்று இலங்கைக்கு எதிரான புதுடெல்லி டெஸ்ட்டில் 5,000 ஓட்டங்கள் மைல்கல்லை எட்டிச் சாதனை படைத்தார். 105 இன்னிங்ஸ்களில் இந்தச் சாதனையை கோஹ்லி படைத் துள்ளார். இதன் மூலம் ஆக விரைவாக 5,000 ஓட்டங்கள் எடுத்த நான்காவது வீரரானார் கோஹ்லி. அதே போல் 3 வடிவங்களிலும் 16,000 ஓட்டங்களைக் கடந்தார் கோஹ்லி. சுரங்க லக்மல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி இந்த மைல்கல்லை எட்டினார் கோஹ்லி. அதே போல் 5,000 ஓட்டங்கள் மைல்கல்லை எட்டிய 11வது இந்திய வீரர் எனும் பெருமையும் அவரைச் சேரும். இருப்பினும், குறைந்த இன்னிங்ஸ்களில் 5,000 ஓட்டங் களை எட்டியதில் இன்னமும் சுனில் கவாஸ்கர்தான் முன்னிலை வகிக்கிறார். சுனில் கவாஸ்கர் தொடக்க வீரராகக் களமிறங்கி 95 இன்னிங்ஸ்களில் 5,000 ஓட்டங்களைக் கடந்தார். வெஸ்லி ஹால் தொடங்கி மிகப் பெரிய உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டவர் சுனில் கவாஸ்கர் என்பது குறிப் பிடத்தக்கது.

அதிரடியாகப் பந்தடித்து இந்தியாவுக்காக சதம் அடித்து ஆஸ்திரேலிய வீரர்களைத் திக்குமுக்காட வைத்த முரளி விஜய் (இடது), அணித் தலைவர் விராத் கோஹ்லி. படம் ஏஎஃப்பி