மாஸ்கோ: அடுத்த ஆண்டு ரஷ்யா வில் நடைபெறும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள குழுக்கள் எந்தெந்த பிரிவுகளில் இடம் பெறுவது குறித்து நிர்ணயிக்கும் குலுக்கல் முறை நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில் போட்டியை ஏற்று நடத்தும் ரஷ்யா 'ஏ' பிரிவில் இடம்பெறுகிறது. சவூதி அரேபியா, எகிப்து, உருகுவே ஆகிய குழுக்களும் இப்பிரிவில் உள்ளன. அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவதில் ரஷ்யாவுக்குச் சிரமம் இருக்காது என்று எதிர்பார்க்கப் படுகிறது. மற்ற பிரிவுகளைவிட 'டி' பிரிவுதான் ஆக சவால்மிக்கது. அதில் அர்ஜெண்டினா, ஐஸ்லாந்து, குரோவேஷியா, நைஜீரியா ஆகிய குழுக்கள் இடம்பெறுகின்றன.
'இங்கிலாந்து மெத்தனத்துடன் இருக்காது'
1 mins read

